பிறப்பு முதல் இறப்பு வரை கிடா வெட்டு
ஆமங்க இது உண்மைதான் தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி பகுதியான பேராவுரணி அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நடக்கிறது .
பேராவுரணியைப் பற்றி பெரும்பாலும் தெறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது தமிழ்நாட்டிலேயே கோடிகணக்கில் மொய் வசூல் செய்யும் பகுதி இதாங்க, தேங்கயுக்கும் நெல் சாகுபடிக்கும் அதிகமாக பெயர் பெற்ற பகுதி
இந்த ஊருக்கு அருகிலேயே வங்காள விரிகுடா கடல் பகுதியும் அமைந்துள்ளது எப்பொழுதும் பச்சைபசேல்லென்று காட்சியளிக்கும் இந்த பேராவுரணி
இந்த ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக அமைந்திருக்கிறது களி,முனி,கருப்பராயன்,அய்யனார் போன்ற தெய்வங்களுக்கான கோவில்கள் இங்கு நடைபெறும் கிடாவெட்டு பூஜையானது பிரதித்திபெட்றது கரணம் பெரும்பாலும் பெண்கள் கலந்துகொள்வதில்லை இங்கு வெட்டப்படும் கிடாய்கள் இங்கேயே சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது,
இந்த கிராமப்புற மக்களின் வீடுகளில் நடைபெறும் அனைத்து சுக துக்க நிகழ்சிகளில் கறி விருந்தே போடப்படுகிறது காது குத்து தொடக்கி கல்யாணம் பெயர் வைப்பது நிச்சயதார்த்தம் மொய்விருந்து போன்ற அணைத்து நிகழ்சிகளிலும் கிடா கறி நிச்சயம் .
அடுத்ததாக வருவது இந்த மொய்விருந்து நிகழ்ச்சி ஆடி மாதம் தொடக்கி இரண்டுமாதங்கள் நடைபெறும் இந்த மொய்விருந்து (ம் ம் ம் .....) சூப்பர் .காரணம்
இந்த இரண்டு மாதங்களும் நடைபெறும் மொய்விருந்தில் தினமும் கிடா விருந்துதான்
ஒரு வெள்ளை வேஷ்டி சட்டை இருந்தா போதுமுங்கோ உடம்பதேத்திபுல்லாம்...
நான் கண்டது
ஒருவர் வீட்டில் நடைபெறும் சுக துக்க நிகழ்சிகளுக்கு பக்கத்துவீட்டுகாரர்களை கூட
அழைக்காமல் தன் சொந்தங்களை மட்டும் கூட்டிக்கொல்லும் இந்த நகரத்து வாழ்கையில்
ஒருவர் வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்சிகளிலும் ஒரு ஊரே கூடியிருக்கும் இங்கு சாதிகள் பார்க்கப்படுவதில்லை ஏழை பணக்காரன் என்று பார்க்கப்படுவதில்லை
இப்படியும் வாழ்கிறார்கள் இவர்கள்
"சொந்தங்கள் பரம்பரையால் வருவதல்ல பாசத்தால் வருவது "
இதாங்க எங்க பேராவுரணி
Post a Comment